Pages

04.12.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 15.12.1999 மதுபன்

04.12.2016    காலை முரளி      ஓம் சாந்தி        ''அவ்யக்த பாப்தாதா''
ரிவைஸ் 15.12.1999 மதுபன்


'' எண்ண சக்தியின் மகத்துவத்தை தெரிந்து, இதை அதிகரியுங்கள் மேலும்
நடைமுறை பயன்பாட்டில் கொண்டு வாருங்கள் ''

இன்று உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை தன்னுடைய நாலாபுறங்களிலும் உள்ள சிரேஷ்ட குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் முழு உலகின் ஆத்மாக்களை விட குழந்தைகள் நீங்கள் சிரேஷ்டமானவர்கள் அதாவது மிக உயர்ந்தவர்கள். உலகத்தினர் உலகத்திலேயே மிக உயர்ந்தவர் என்று கூறுகிறார்கள். மேலும் அதுவும் ஒரு ஜென்மத்திற்காக ஆனால் நீங்கள் குழந்தைகள் முழுக் கல்பத்திலும் மிக உயர்ந்தவர்கள். முழுக் கல்பத்திலும் நீங்கள் சிரேஷ்டமாக இருந்திருக்கிறீர்கள். அதைத் தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? உங்களுடைய அனாதி காலத்தை (பரந்தாமத்தில் இருந்த காலத்தை) பாருங்கள். அனாதி காலத்திலும் நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் தந்தையின் அருகாமையில் இருப்பவர்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அனாதி ரூபத்தில் தந்தையின் கூடவே மிக அருகில் இருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள். அனைவருமோ இருக்கிறார்கள், ஆனால் உங்களுடைய இடம் மிக அருகாமையில் இருக்கிறது. அப்படி அனாதி ரூபத்திலும் நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள். பிறகு ஆதி காலத்தில் (கல்பத்தின் தொடக்க காலத்தில்) வாருங்கள், அங்கே நீங்கள் அனைத்து குழந்தைகளும் தேவ பதவி அடைந்த தேவதை ரூபத்தில் இருக்கிறீர்கள். தன்னுடைய தேவதை சொரூபம் நினைவில் இருக்கிறதா? ஆதி காலத்தில் நீங்கள் அனைத்து பிராப்தி சொரூபமானவர்கள். உடல், மனம், செல்வம் மற்றும் மனிதர்கள் அப்படி நான்கு சொரூபத்திலுமேயே சிரேஷ்டமானவர்கள். நீங்கள் எப்பொழுதும் நிரம்பியவர்களாக அனைத்து பிராப்தி சொரூபமானவர்களாக இருக்கிறீர்கள். அந்த மாதிரியான தேவ பதவி வேறு எந்த ஆத்மாக்களுக்குப் பிராப்தி ஆவதில்லை. தர்ம ஆத்மாக்களானாலும், மகாத்மாக்களாக இருந்தாலும் ஆனால் அந்த மாதிரி அனைத்து பிராப்திகளின் சிரேஷ்டமான, இதனை பிராப்தியாக அடையவில்லை என்பதின் பெயர், அடையாளம் கூட இல்லாத நிலையை வேறு யாரும் அனுபவம் செய்ய முடியாது. பிறகு மத்திய காலத்திற்கு வந்தீர்கள் என்றால், மத்திய காலத்திலும் ஆத்மாக்கள் நீங்கள் பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். உங்களுடைய ஜட விக்கிரகங்கள் பூஜை செய்யப்படுகின்றன. வேறு எந்த ஆத்மாக்களுக்கும் அந்த மாதிரி விதிப்பூர்வமான பூஜை நடப்பதில்லை. எப்படி பூஜைக்குரிய ஆத்மாக்களுக்கு விதிப்பூர்வமாக பூஜை நடக்கிறது என்றால் அந்த மாதிரி விதிப்பூர்வமாக வேறு யாருக்காவது பூஜை நடக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் பூஜை நடக்கிறது. ஏனென்றால், நீங்கள் கர்மயோகி ஆகிறீர்கள். எனவே பூஜையும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கர்மத்திற்கும் (காரியத்திற்கும்) நடக்கிறது. தர்ம ஆத்மாக்களாக இருந்தாலும் அல்லது மகான் ஆத்மாக்களை கோவில்களில் உடன் வைத்தாலும், அவர்களுக்கு விதிப்பூர்வமான பூஜை நடப்பதில்லை. அப்படி நீங்கள் மத்திய காலத்திலும் மிக உயர்ந்தவர்கள். பிறகு தற்சமயத்தின் இறுதி காலத்தில் வாருங்கள். இறுதி காலத்திலும் சங்கமயுகத்தில் நீங்கள் சிரேஷ்ட ஆத்மாக்கள். என்ன சிரேஷ்டத்தன்மை இருக்கிறது? சுயம் பாப்தாதா, அதாவது பரமாத்ம ஆத்மா மற்றும் ஆதி ஆத்மா, ஆக பாப்தாதா இருவர் மூலமாகவும் பாலனைப் பெறுகிறீர்கள், படிப்பையும் படிக்கிறீர்கள் கூடவே சத்குரு மூலமாக ஸ்ரீமத்தை பெறுவதற்கு உரியவராகவும் ஆகிவிடுகிறீர்கள். அப்படி அனாதி காலம், ஆதி காலம், மத்திய காலம் மற்றும் இப்பொழுது இறுதி காலத்திலும் சிரேஷ்டமானவர்களாக இருக்கிறீர்கள். இந்த அளவு போதை இருக்கிறதா?

இந்த நினைவை வெளிக்கொணர்ந்து எண்ணிப் பாருங்கள் என்று பாப்தாதா கூறுகிறார். மனதில், புத்தியில் இந்த பிராப்தியை ஓட விடுங்கள். எந்த அளவு நினைவை வெளிக்கொணருவீர்களோ அந்த அளவு நினைவில் ஆன்மீக போதை இருக்கும். குஷி இருக்கும், சக்திசாலியாக ஆவீர்கள். அந்த அளவு மிக உயர்ந்த ஆத்மாவாக ஆகியிருக்கிறீர்கள். நான் தான் மிக உயர்ந்தவன், சிரேஷ்மாக ஆகியிருந்தேன், ஆகியிருக்கிறேன், மேலும் எப்பொழுதும் ஆகிக்கொண்டே இருப்பேன் என்ற இந்த நிச்சயம் உறுதியாக இருக்கிறதா? போதை இருக்கிறதா? உறுதியான நிச்சயம் இருக்கிறது என்றால் கையை உயர்த்துங்கள். டீச்சர்களும் கையை உயர்த்தினார்கள்.

மாதர்களோ எப்பொழுதும் குஷியின் ஊஞ்சல் ஆடுகிறார்கள். ஆடுகிறீர்கள் தான் இல்லையா? மாதர்களுக்கு மிகுந்த போதை இருக்கிறது, என்ன போதை இருக்கிறது? எங்களுக்காக தந்தை வந்திருக்கிறார். இந்த போதை இருக்கிறது தான் இல்லையா? துவாபரயுகத்தில் இருந்து அனைவருமே உங்களை கீழே தள்ளினார்கள், எனவே தந்தைக்கு மாதர்கள் மேல் மிகுந்த அன்பு இருக்கிறது மேலும் பிரத்யேகமாக மாதர்களுக்காக தந்தை வந்திருக்கிறார். குஷி அடைகிறார்கள், ஆனால் எப்பொழுதும் குஷியாயிருக்க வேண்டும். இப்பொழுது கையை உயர்த்துகிறீர்கள், குஷியாக இருக்கிறீர்கள் ஆனால் ஊர் திரும்பும் பயணத்தில் செல்லும் போது கொஞ்சம் கொஞ்சம் போதை இறங்கி விடுகிறது என்று அப்படி இருக்க வேண்டாம். எப்பொழுதும் ஒரே சீரான அழியாத போதை இருக்கட்டும். சில நேரத்தின் போதை இல்லை, நிரந்தரமான போதை நிரந்தரமான குஷியைக் கொடுக்கிறது. மாதர்கள் உங்களுடைய முகம் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ஆன்மீக ரோஜா மாதிரி தென்பட வேண்டும். ஏனென்றால், இந்த விஷ்வ வித்தியாலயத்தைப் பற்றிய விஷயத்தில் மாதர்கள் ஆன்மீக ரோஜா மலருக்குச் சமமாக எப்பொழுதும் மலர்ந்திருக்கும் மலர்களாக இருக்கிறார்கள். மேலும் மாதர்களே பொறுப்புக்களை எடுத்து இவ்வளவு பெரிய காரியம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தான் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது, விசேஷமாகத் தென்படுகிறது. மகாமண்டலேஷ்வராக இருந்தாலும் அவரும் மாதர்கள் பொறுப்பாளர்களாக ஆகி, இந்த மாதிரியான சிரேஷ்ட காரியத்தை சுலபமாக செய்வித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறார். பெண்களைப் பற்றி ஒரு பழமொழி இருக்கிறது, உண்மையில்லை, ஆனால் பழமொழி, அதாவது இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு காரியம் செய்வது என்பது மிகக் கடினம். ஆனால் இங்கே யார் பொறுப்பில் இருக்கிறார்கள். பெண்களே தான் இல்லையா? யாராவது சந்திக்க வருகிறார்கள் என்றால் என்ன கேட்கிறார்கள்? பெண்களா நடத்துகிறார்கள். அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதில்லையா, பிரச்சனை செய்வதில்லையா என்று கேட்பார்கள். ஆனால் இவர்கள் சாதாரண பெண்கள் இல்லை, இவர்கள் பரமாத்மா மூலமாக பொறுப்பாளர் ஆகியிருக்கும் ஆத்மாக்கள் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? பரமாத்மாவின் வரதானம் இவர்களை நடத்துவித்துக் கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கு என்ன தெரியும்? சகோதரர்கள் இங்கு பெண்களுக்குத் தான் மரியாதை, எங்களுக்கு இல்லையா என்ன என்று அப்படி நினைக்கவில்லையே ! உங்களைப் பற்றியும் ஐந்து பாண்டவர்களின் மகிமை வர்ணனை செய்யப்பட்டு இருக்கிறது. சக்திகளுடன் 7 சீதளைகளைக் (தேவி) காண்பிக்கிறார்கள் என்றால் ஒரு பாண்டவரையும் காண்பித்திருக்கிறார்கள். மேலும் பாண்டவர்களின்றி பெண்களும் நடத்த முடியாது, பெண்களின்றி பாண்டவர்களும் நடத்த முடியாது. இரண்டு புஜங்களும் வேண்டும். ஆனால் தாய்மார்களை மிகவும் கீழே தள்ளினீர்கள் தான் இல்லையா? இந்த உலகத்தினர் பெண்களால் நடத்துவது அசம்பவம் என்று நினைத்தார்கள் இல்லையா? எனவே தந்தை அதை சம்பவமாக்கிக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் மாதர்களைப் பார்த்து குஷியடைகிறீர்கள் தான் இல்லையா? அல்லது இல்லையா? குஷி தான் இல்லையா. ஒருவேளை பெண்களை தந்தை பொறுப்பாளராக ஆக்கவில்லை என்றால் புதிய ஞானம், புதிய சிஸ்டம் (முறை) ஆன காரணத்தினால் பாண்டவர்களைப் பார்த்து மிகுந்த குழப்பம் ஏற்படும். பெண்கள் கவசமாக இருக்கிறார்கள். ஏனென்றால் புதிய ஞானம் இல்லையா? புதிய விஷயங்கள் இல்லையா? ஆனால் சகோதரிகளுடன் எப்பொழுதும் சகோதரர்கள் உடன் இருக்கிறார்கள். பாண்டவர்கள் அவர்கள் காரியத்தில் முன்னுக்கு இருக்கிறார்கள் மேலும் சகோதரிகள் அவர்களுடைய காரியத்தில் முன்னுக்கு இருக்கிறார்கள். இருவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு காரியமும் தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பாப்தாதா குழந்தைகள் செய்யும் விதவிதமான காரியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். புதுப்புது திட்டங்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. நேரமோ அனைவர்களுக்கும் நினைவு இருக்கிறது தான் இல்லையா? நினைவு இருக்கிறதா? 1999-ன் வட்டமும் முடிவடைந்தது தான் இல்லையா? 1999 வந்து விட்டது, 1999 வந்து விட்டது என்று என்ன யோசித்தீர்கள். ஆனால் உங்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்கான வருடம், தடையற்று இருப்பதற்கான வருடமாக கிடைத்தது. பாருங்கள் 1999 லேயே மௌன பட்டிகள் செய்கிறீர்கள் தான் இல்லையா? உலகம் பயப்படுகிறது. மேலும் நீங்கள், எவ்வளவு அவர்கள் பயப்படுகிறார்களோ அந்த அளவு நீங்கள் அனைவரும் நினைவின் ஆழத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். மனதின் மௌனமே ஞானக்கடலின் ஆழத்தில் செல்வது மற்றும் புதுப்புது அனுபவங்களின் இரத்தினங்களைக் கொண்டு வருவது. பாப்தாதா இதற்கு முன்பு சமிக்ஞை கொடுத்திருக்கிறார், அனைத்தையும் விட மிகப்பெரிய களஞ்சியம் எது நிகழ்காலத்தையும் மற்றும் எதிர்காலத்தையும் உருவாக்குகிறது. அது தான் உயர்ந்த களஞ்சியம், உயர்ந்த எண்ணத்தின் களஞ்சியம். எண்ண சக்தி மிகப்பெரிய சக்தி, அந்த சிரேஷ்ட எண்ணத்தின் சக்தி குழந்தைகள் உங்களிடம் இருக்கிறது. எண்ணமோ அனைவரிடமும் இருக்கிறது, ஆனால் சிரேஷ்ட சக்தி, சுபபாவனை மற்றும் சுபவிருப்பங்களின் எண்ணத்தின் சக்தி, மனம், புத்தியை ஒருமித்த நிலை ஆக்கும் சக்தி, அது உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. மேலும் நீங்கள் எவ்வளவு முன்னேறிச் சென்று கொண்டே இருப்பீர்களோ, அவ்வளவு இந்த எண்ணத்தின் சக்தியை சேமித்துக் கொண்டே இருப்பீர்கள், வீணாக இழக்க மாட்டீர்கள். வீணாக இழப்பதின் முக்கிய காரணம் வீணான எண்ணம். வீணான எண்ணம் பெரும்பான்மையான குழந்தைகளிடம் முழு நாளிலும் இன்றும் கூட இருக்கிறது என்று பாப்தாதா பார்த்தார். எப்படி ஸ்தூலமான பணம், செல்வத்தை சிக்கனத்தோடு உபயோகிப்பவர் எப்பொழுதுமே நிரம்பியவராக இருக்கிறார், ஆனால் வீணாக இழப்பவர்கள் எங்காவது ஏமாற்றத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த மாதிரி சிரேஷ்ட சுத்த எண்ணத்தில் உங்களுடைய கேட்சிங் பவர் (புரிந்து கொள்ளும் சக்தி), வைப்ரேஷனை பிடிப்பதற்கான சக்தி மிக அதிகரித்து விடுகிறது அந்த அளவிற்கு அதில் சக்தி இருக்கிறது. எப்படி இந்த கம்பியில்லாத தொலைபேசி மற்ற அறிவியல் சாதனங்கள் காரியங்கள் செய்கின்றன அதே போல் சுத்த எண்ணத்தின் பொக்கிஷம் மூலம் யாராவது லண்டனில் அமர்ந்திருக்கும் ஆத்மாவின் எண்ண அலைகளைக் கூட உங்களால் அந்த மாதிரி மிகத் தெளிவாகப் பிடித்துக் கொள்ள முடியும். எப்படி கம்பியில்லா தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் காரியம் செய்கின்றனவோ. இவற்றை விட தெளிவாக உங்களுடைய கேட்சிங் பவர், ஒருமித்த நிலையின் சக்தி மூலம் இன்னும் அதிகரிக்கும். இந்த (அறிவியல்) ஆதாரங்களோ அழிந்து விடும். இந்த அனைத்து சாதனங்களும் எதன் ஆதாரத்தில் இருக்கின்றன? மின்சாரத்தின் ஆதாரத்தில். என்னென்ன சுகத்திற்கான சாதனங்கள் இருக்கின்றனவோ, அவற்றில் பெரும்பான்மையானவை மின்சாரத்தின் ஆதாரத்தில் இயங்குகின்றன. அப்படி உங்களுடைய ஆன்மீக சக்தி ஆத்மாவின் சக்தி இந்தக் காரியத்தை செய்ய முடியாதா என்ன? எண்ண அலைகள் அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் உங்களால் அதைப் பிடிக்க முடியும். இப்பொழுது நிலைமை என்னவென்றால், ஒருமித்த நிலையின் சக்தி, மனம், புத்தி இரண்டுமே ஒருமித்த நிலையில் இருக்கிறது என்றால் தான் கேட்சிங் பவர் இருக்கும். மிக அதிக அனுபவம் செய்வீர்கள். சுயநலமற்ற, சுத்தமான, தெளிவான எண்ணத்தை உருவாக்கினீர்கள் என்றால் அது மிக விரைவிலேயே அனுபவம் செய்விக்கும். அமைதி சக்தியின் எதிரில் இந்த அறிவியல் சக்தி தலைவணங்கும். அறிவியல் கூட ஏதோ வெற்றிடம் இருக்கிறது அதை நிரப்ப வேண்டும் என்று இப்பொழுது கூட உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள். எனவே பாப்தாதா மீண்டும் இறுதி நிலை, இறுதி சேவை நேரத்தில் இந்த எண்ணத்தின் சக்தி மிக வேகமான சேவை செய்விக்கும் என்று அடிக்கோடிட்டு காண்பிக்கிறார். எனவே எண்ண சக்தியின் மேல் இன்னும் அதிக கவனம் செலுத்துங்கள். அதை மிச்சப்படுத்துங்கள், சேமிப்பு செய்யுங்கள். மிக உதவியாக இருக்கும். இந்த எண்ணத்தின் சக்தி மூலம் சக்திகளை உபயோகப்படுத்துபவராக ஆவீர்கள். அறிவியலின் மகத்துவம் என்ன? உபயோகத்தில் வருகிறது என்பதால் தான் இந்த அறிவியல் நல்ல காரியம் செய்கிறது என்று நினைக்கிறார்கள். எனவே அமைதியின் சக்தியை காரியத்தில் கொண்டு வருவதற்காக ஒருமித்த நிலையின் சக்தி வேண்டும். மேலும் ஒருமித்த நிலைக்கான மூல ஆதாரம் மனதின் கட்டுப்படுத்தும் சக்தி அதன் மூலம் மனோபலம் அதிகரிக்கிறது. மனோபலத்திற்கு மிகுந்த மகிமை இருக்கிறது. மந்திர தந்திரம் செய்பவர்கள் கூட மனோபலம் மூலமாக அற்ப காலத்தின் அதிசயங்களைச் செய்து காண்பிக்கிறார்கள். நீங்களோ விதிப்பூர்வமாக, மந்திர தந்திரம் இல்லை, விதிப்பூர்வமாக நன்மை பயக்கும் அதிசயம் காண்பிப்பீர்கள். அது வரதானம் ஆகிவிடும். உலக ஆத்மாக்களுக்காக இந்த எண்ணத்தின் சக்தியை உபயோகப்படுத்துவது வரதானமாக நிரூபணம் ஆகிவிடும். எனவே மனதைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்படுத்தும் சக்தி என்னிடம் இருக்கிறதா என்று முதல் சோதனை செய்யுங்கள். ஒரு நொடியில், எப்படி அறிவியல் சக்தியில் பொத்தானின் ஆதாரத்தினால், பொத்தானை அழுத்துங்கள், பொத்தானை விடுவியுங்கள் - அதே போல் மனதை எங்கே விரும்புகிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ, எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ அந்த அளவு கட்டுப்படுத்த முடியுமா? தனக்காகவும் மற்றும் சேவைக்காகவும் மிக நல்ல நல்ல வெற்றி ரூபம் தென்படும். ஆனால் எண்ணத்தின் சக்தியின் சேமிப்பு கணக்கில் இப்பொழுது கூட உங்களுக்கு சாதாரண கவனம் தான் இருக்கிறது என்று பாப்தாதா பார்க்கிறார். எந்த அளவு கவனம் இருக்க வேண்டுமோ அந்த அளவு இல்லை. எண்ணத்தின் ஆதாரத்தில் பேச்சு மற்றும் காரியம் தானாக நடக்கின்றன. இன்று வார்த்தைகள் மேல் கட்டுப்பாடு செய்யுங்கள், இன்று பார்வையை கவனத்தில் கொண்டு வாருங்கள், கடுமையாக முயற்சி செய்யுங்கள், இன்று உள்உணர்வை கவனம் வைத்து மாற்றம் செய்யுங்கள் என்று தனித்தனியாக முயற்சி செய்வதற்கான அவசியமே இல்லை. ஒருவேளை எண்ணத்தின் சக்தி மிகவும் சக்திசாலியாக இருக்கிறது என்றால் இவை அனைத்தும் தானாகவே கட்டுப்பாட்டில் வந்து விடுகின்றன. கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். எனவே எண்ணத்தின் சக்தியின் மகத்துவத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

விசேஷமாக இந்த பட்டிகள் ஏன் செய்விக்கிறோம் என்றால் இது பழக்கமாகி விடவேண்டும். இந்தப் பழக்கத்தை எதிர்காலத்திலும் கவனம் வைத்து, செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் தான் அழியாததாக ஆகிவிடும். மகத்துவம் என்ன என்று புரிந்ததா? உங்களிடம் உயர்ந்ததிலும் உயர்ந்த பொக்கிஷத்தை தந்தை கொடுத்திருக்கிறார். இந்த சிரேஷ்ட எண்ணம், சுப பாவனை, சுப விருப்பத்தின் எண்ணத்தின் பொக்கிஷம் இருக்கிறதா? தந்தை அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். ஆனால் சேமிப்பை வரிசைக்கிரமமாக செய்கிறார்கள் மேலும் பயன்பாட்டில் கொண்டு வருவதின் சக்தி கூட வரிசைக்கிரமமாக இருக்கிறது. இப்பொழுது கூட சுபபாவனை மற்றும் சுபவிருப்பங்கள் இவற்றை காரியத்தில் பயன்படுத்தினீர்களா? விதிப்பூர்வமாக செய்வதினால் சித்தியின் (வெற்றியின்) அனுபவம் ஆகிறதா? இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் ஆகிறது. இறுதியில் உங்களுடைய எண்ணத்தின் சக்தி அந்த அளவு மகான் ஆகிவிடும் - சேவையில் வாய்மொழி மூலம் செய்தி கொடுப்பதில் என்ன நேரத்தையும் ஈடுபடுத்துகிறீர்கள், பணத்தையும் ஈடுபடுத்துகிறீர்கள், குழப்பத்திலும் வந்து விடுகிறீர்கள், களைப்படைந்தும் விடுகிறீர்கள். . . ஆனால் சிரேஷ்ட எண்ணத்தின் சேவையில் இவை அனைத்தும் மிச்சம் ஆகிவிடும். அதை அதிகரியுங்கள். இந்த எண்ணத்தின் சக்தியை அதிகரிப்பதினால் பிரத்யக்ஷமும் விரைவில் ஏற்படும். இப்பொழுது 62 - 63 வருடங்கள் ஆகிவிட்டன, இவ்வளவு காலத்தில் எத்தனை ஆத்மாக்களை உருவாக்கியிருக்கிறீர்கள்? 9 லட்சம் கூட இன்னும் முழுமையாகவில்லை. மேலும் முழு உலகத்திற்கும் செய்தியைக் கூற வேண்டும் என்றால், எத்தனை கோடி கணக்கான ஆத்மாக்கள் இருக்கிறார்கள்? இன்று வரையிலும் கூட பகவான் இவர்களின் ஆசிரியர், பகவான் இவர்களை செய்வித்துக் கொண்டிருக்கிறார், செய்விப்பவர் பரமாத்மா, செய்வித்துக் கொண்டிருக்கிறார் என்ற இந்த விஷயம் தெளிவாகவில்லை. நல்ல காரியம் மற்றும் சிரேஷ்ட காரியம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி பரவி இருக்கிறது. ஆனால் செய்விப்பவர் இப்பொழுது கூட குப்தமாக (மறைமுகமாக) இருக்கிறார். எனவே இந்த எண்ண சக்தி மூலம் ஒவ்வொருவரின் புத்தியை மாற்றம் செய்ய முடியும். ஆஹா பிரபு ! என்று கூறி பிரத்யக்ஷமானாலும் சரி, தந்தையின் ரூபத்தில் பிரத்யக்ஷமானாலும் சரி. எனவே இப்பொழுது கூட எண்ணத்தின் சக்தியை அதிகரியுங்கள். மேலும் நடைமுறை உபயோகத்தில் கொண்டு வந்து கொண்டே இருங்கள் என்று பாப்தாதா மீண்டும் கவனம் கொடுக்கிறார். புரிந்ததா ?

நல்லது. இன்று மாதர்களுக்கான வாய்ப்பு, ஒன்று மாதர்களின் குரூப் மற்றும் இன்னொன்று மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள். மாதர்கள் என்ன அதிசயம் செய்வீர்கள்? உறுப்பினராக ஆகிவிட்டீர்களா? பெண்களின் துறையில் உறுப்பினராக இருக்கிறீர்களா? நல்ல விஷயம் தான் இல்லையா? ஆனால் யாரெல்லாம் உறுப்பினர் ஆகியிருக்கிறார்களோ அவர்கள் நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் அனைவருடைய பட்டியலை அரசாங்கத்திற்கு அனுப்புவோம். ஏன் அனுப்புவோம் என்று பயப்படாதீர்கள். வருமான வரித்துறையைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் வரமாட்டார்கள், எனவே இந்த அனைத்து மாதர்களும் இப்பொழுது உலக மாதர்கள் ஆகி உலகத்தைத் திருத்துவார்கள் என்று அனுப்புவோம். இந்தக் காரியம் செய்வீர்கள் தான் இல்லையா. எனவே இவ்வளவு பெண்கள் உலகைச் சொர்க்கமாக ஆக்குபவர்கள் என்று உங்களுடைய பெயரை அரசாங்கத்திற்கு அனுப்பலாமா? அனுப்பலாமா, கையை உயர்த்துங்கள், பயப்படவில்லையே? பயப்படாதீர்கள். ஆனால் ஒருவேளை உங்களைப் பற்றி அப்படியே விசாரித்தார்கள் என்றால், முதலில் உங்களுடைய வீடு சொர்க்கமாக ஆகியிருக்கிறதா என்பதில் கவனம் வைக்க வேண்டும். ஏனென்றால் முதலில் தன்னுடைய வீடு பிறகு உலகம். அப்படி எந்தவொரு மாதரின் வீட்டிற்கு வந்து சுகம், சாந்தி இருக்கிறதா என்று பார்க்கட்டும். அப்படி தென்படுமா, வீட்டை சொர்க்கமாக ஆக்குவீர்களா? அல்லது உலகை சொர்க்கமாக ஆக்குவீர்கள், வீட்டை இல்லை என்று அப்படியா? முதல் வீட்டை ஆக்கினீர்கள் என்றால் தான் மற்றவர்கள் மீது பிரபாவம் ஏற்படும். இல்லையென்றால் வீட்டில் கலகம் தான் இருக்கிறது, சொர்க்கம் எங்கே இருக்கிறது? என்று கூறுவார்கள். எனவே மாதர்களுக்கு அந்த மாதிரி வாயுமண்டலத்தை உருவாக்க வேண்டும். அதை யார் பார்த்தாலும் மாதர்கள் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தென்பட வேண்டும். நல்லது. யார் உறுப்பினரோ அவர்கள் கையை உயர்த்துங்கள். எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? (1000 வந்திருக்கிறார்கள்) 1000 கூட மிக அதிகம். யாரெல்லாம் உறுப்பினர் என்று கையை உயர்த்தினார்களோ அவர்களுடைய வீட்டில் சுகம், சாந்தி இருக்கிறதா? ஆம் என்கிற அந்த கையை உயர்த்துங்கள். எழுந்து நில்லுங்கள். புரிந்து கொண்டீர்களா அல்லது அப்படியே எழுந்து நின்று விட்டீர்களா? வீடு சொர்க்கமாக இருக்கிறதா? வீட்டில் அமைதி இருக்கிறதா? நல்லது. இவர்களைப் புகைப்படம் எடுங்கள். நல்லது.

நாலாபுறங்களின் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, முதல், இடை மற்றும் கடையில் சிரேஷ்ட பங்கைச் செய்யக்கூடிய ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் தன்னுடைய சிரேஷ்ட எண்ணத்தின் விதியை அனுபவம் செய்யக்கூடிய, எப்பொழுதும் சகஜயோகியின் கூடவே யோகத்தைக் காரியத்தில் பயன்படுத்தக்கூடிய, எப்பொழுதும் எண்ணத்தின் சக்தி மூலமாக அனைத்து சக்திகளையும் அதிகரிக்கக்கூடிய, மனம் மற்றும் புத்தியின் மீது கட்டுப்பாடு வைக்கக்கூடிய, சதா பிரயோகித்து வரும் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:
பழைய சம்ஸ்காரங்கள் மற்றும் தடைகளிலிருந்து முக்தி (விடுதலை) அடையக்கூடிய எப்பொழுதும் சக்தி நிறைந்தவர் ஆகுக.!

எந்தவிதமான தடைகளிலிருந்தும் பலஹீனங்களிலிருந்தும் அல்லது பழைய சம்ஸ்காரங்களிலிருந்தும் முக்தி விரும்புகிறீர்கள் என்றால், சக்தியை தாரணை செய்யுங்கள். அதாவது அலங்கரிக்கப்பட்ட ரூபமாகி இருங்கள். யார் அலங்காரங்களினால் எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் எதிர்காலத்தில் விஷ்ணுவம்சத்தினர் ஆகிறார்கள். ஆனால் இப்பொழுது வைஷ்ணவர் ஆகிவிடுகிறார்கள். அவர்களை எந்தவிதமான கீழ்த்தரமான எண்ணம் மற்றும் சம்ஸ்காரம் தொட முடியாது. அவர்கள் பழைய உலகம் மற்றும் உலகத்தின் எந்தவொரு பொருள் மற்றும் நபர்களிலிருந்து சுலபமாகவே விலகிவிடுகிறார்கள். அவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரும் தொட முடியாது.

சுலோகன் –
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு காரியத்திலும் சமநிலை வைப்பது தான் அனைவரின்ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான வழி ஆகும்.

ஓம் சாந்தி

I like to invite you on our YouTube Channel