இனிமையான குழந்தைகளே! இது உங்களுடைய கடைசி பிறவியாகும். ஆகையால்விகாரங்களின்
சன்னியாசம் செய்யுங்கள், இந்த கடைசி பிறவியில் இராவணனின் சங்கிலி பிணைப்பிலிருந்து தன்னை
விடுவித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:
தந்தையின் உதவி எந்தக் குழந்தைகளுக்கு கிடைக்கிறது? தந்தை எந்த குழந்தைகள் மீதுதிருப்தியாக
இருக்கிறார்?
பதில்:
உண்மையான உள்ளம் உடையவருக்கு தந்தையின் உதவி கிடைக்கிறது. உண்மையானஉள்ளம் கொண்டவர் மீது (சாஹிப்) இறைவன் திருப்தியாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது.யார் தந்தையின் அனைத்து வழிகளையும் நடைமுறைப்படுத்துகின்றனரோ அவர்கள் மீது பாபாதிருப்தியாக இருக்கிறார். நினைவில் இருந்து தூய்மையாகி சேவை செய்யுங்கள், பிறருக்குவழி காட்டுங்கள் என்பது தந்தையின் அறிவுரையாகும். சூத்திரர்களின் தொடர்பிலிருந்து தன்னை காத்துக் கொள்ளுங்கள். கர்மேந்திரியங்களின் மூலம் ஒரு போதும் தீய காரியங்களைசெய்யக் கூடாது. யார் இந்த அனைத்து விஷயங்களையும் தாரணை செய்கின்றனரோ அவர்கள்மீது தந்தை திருப்தியாக இருக்கிறார்.
பாடல்:
எனக்கு உதவி செய்பவர். . .
ஓம் சாந்தி.
குழந்தைகள் இங்கே ஞானத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எந்த ஞானம்?சாஸ்திரங்களின் ஞானத்தையா? சாஸ்திரங்களின் ஞானத்தை அனைத்து மனிதர்களுமேகூறுகின்றனர் என குழந்தைகளுக்குத் தெரியும். நமக்கு இங்கே பரமபிதா பரமாத்மாஞானத்தைக் கொடுக்கிறார். சாஸ்திரங்கள் முதலானவைகளைப் படிக்கக் கூடிய அல்லதுபாராயணம் செய்யக் கூடிய எந்த சன்னியாசியும் இப்படி சொல்ல மாட்டார்கள். அவர்கள் ஞானம்எதுவும் சொல்வதில்லை. எந்த சத்சங்கத்திற்குச் சென்றீர்கள் என்றாலும் மனிதர்அமர்ந்திருப்பார். அவரை சாஸ்திரிகள், பண்டிதர்கள் அல்லது மகாத்மா என்று சொல்வார்கள்.பெயர் மனிதர்களுடன் தான் சம்மந்தப்பட்டதாக இருக்கும். இங்கே மனிதர்கள் யாரும்ஞானத்தைக் கொடுப்பதில்லை, ஆனால் மனிதரின் மூலம் நிராகார பரமபிதா பரமாத்மாஞானத்தைக் கொடுக்கிறார் என குழந்தைகளுக்குத் தெரியும். இந்த விஷயங்கள் எந்தசத்சங்கத்திலும் சொல்லப்படுவதில்லை. சொற்பொழிவாற்றுபவர்களின் புத்தியில் கூட இந்த விஷயங்கள் இருக்க முடியாது. நமக்கும் கூட ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் ஏதும்மனிதரோ அல்லது தேவதையோ அல்ல. இந்த சமயத்தில் தேவி தேவதா தர்மம் இல்லைஎன்றாலும் கூட சூட்சும வதனவாசிகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இவர்களின் பெயர்பாடப்படுகிறது. லட்சுமி நாராயணர் முதலான அனைவரும் தெய்வீக குணங்கள் உடையமனிதர்கள் ஆவர். இந்த சமயத்தில் அனைவரும் அசுர குணங்கள் கொண்ட மனிதர்களாகஉள்ளனர். எந்த மனிதரும் நான் ஆத்மா என புரிந்து கொள்வதில்லை. இன்னார் மூலமாகபரமாத்மா நமக்கு ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் இன்ன மஹாத்மா,இன்ன சாஸ்திரிகள் நமக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கிறார் என புரிந்து கொள்கின்றனர்.வேத, சாஸ்திரங்கள் முதலானவை சொல்லிக்கொண்டிருக்கிறார், கீதை சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் உங்களுக்கு அது போன்ற சாஸ்திரங்களின் விஷயங்களைசொல்வதில்லை என தந்தை சொல்கிறார். நீங்கள் தன்னை ஆத்மா என நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள், பிறகு பதித பாவனரே (தூய்மையற்றவரை தூய்மையாக்குபவரே) வாருங்கள் என சொல்கிறீர்கள். அனைவரின் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர், அனைவருக்கும்அமைதியை வழங்கும் வள்ளல், அனைவருக்கும் முக்தி, ஜீவன் முக்தி வழங்கும் வள்ளல்.அவர் மனிதராக இருக்க முடியாது. மனிதர்கள் அதிகாலையில் எழுந்து எவ்வளவு பக்திசெய்கின்றனர். சிலர் பஜனை பாடுகின்றனர், கதா காலட்சேபம் செய்கின்றனர், - இதற்கு பக்திமார்க்கம் என சொல்லப்படுகிறது. பக்தி மார்க்கத்தவர்களுக்கு பக்தி மார்க்கம் என்பது என்னஎன்பது தெரியாது. இங்கே எல்லா இடங்களிலும் பக்தியோ பக்திதான் உள்ளது. ஞானம் என்பதுபகல், பக்தி என்பது இரவாகும். ஞானம் இருக்கும்போது பக்தி இருக்காது. பக்தி இருக்கும் போது ஞானம் இருக்காது. துவாபர, கலியுகம் என்பது பக்தி, சத்யுகம், திரேதாவில் ஞானத்தின் பலன்.அந்த ஞானக்கடல்தான் பக்தியின் பலனைக் கொடுக்கிறார். பகவான் என்ன பலனைக்கொடுப்பார். பலன் என்றால் ஆஸ்தி. பகவான் முக்தியின் ஆஸ்தியை கொடுப்பார். முக்திதாமத்திற்கு தன்னுடன் அழைத்துச் செல்வார். இந்த சமயத்தில் இவ்வளவு மனிதர்கள்இருக்கின்றனர், இருப்பதற்கு இடம் இல்லை, தானியம் இல்லை, ஆகையால் பகவான்வரவேண்டியுள்ளது. இராவணன் அனைவரையும் தூய்மையை இழக்கச் செய்கிறான், பிறகுபதித பாவனர் வந்து தூய்மையாக்குகிறார். தூய்மையாக்குபவர் வேறு மற்றும்தூய்மையற்றவராக ஆக்குபவர் வேறு. தூய்மையான உலகத்தை தூய்மையற்றதாகஆக்குபவர் யார், தூய்மையற்ற உலகத்தை தூய்மையாக்குபவர் யார் என இப்போது நீங்கள்தெரிந்து கொண்டீர்கள். பதித பாவனா வாருங்கள் என சொல்கின்றனர் ஒருவரைத்தான்அவ்வாறு அழைக்கின்றனர். அனைவரையும் வளர்ப்பவர் ஒருவரே. சத்யுகத்தில் விகாரிகள் யாரும் இருக்க முடியாது. தூய்மையற்றவர் என்றால் விகாரத்தில் செல்பவர்கள். சன்னியாசிகள்விகாரத்தில் செல்வதில்லை, ஆகையால் அவர்களை தூய்மையற்றவர்கள் எனசொல்வதில்லை. தூய்மையான ஆத்மா என்று. 5 விகாரங்களின் சன்னியாசம் செய்துவிட்டவர்என சொல்லப்படுகிறது, முதல் நம்பர் விகாரம் காமம் ஆகும். கோபம் சன்னியாசிகளுக்குள்ளும்நிறைய இருக்கிறது. மனைவியை விட்டு விடுகின்றனர், அவர்களுடன் இருந்தால் மனிதர்கள்நிர்விகாரியாக (விகாரமற்றவர்களாக) இருக்க முடியாது என புரிந்து கொள்கின்றனர்.திருமணத்தின் அர்த்தமே இது (விகாரம்) தான். சத்யுகத்தில் இந்த சட்டம் கிடையாது.குழந்தைகளே அங்கே யாரும் தூய்மையற்றவர்கள் கிடையாது என்று பாபா புரியவைக்கிறார்.தேவதைகளின் மகிமை அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்கள், சம்பூரண நிர்விகாரிகள்என்பதாகும். இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆவதே துவாபரயுகத்திலிருந்து. காமத்தைவெல்லுங்கள் என தந்தை சொல்கிறார். நீங்கள் என்னை நினைவு செய்தால் மற்றும்தூய்மையான உலகத்தை நினைவு செய்தால் தூய்மையற்றவராக ஆக மாட்டீர்கள். நான்தூய்மையான உலகை ஸ்தாபனை செய்ய வந்துள்ளேன் மற்றும் இன்னொரு விஷயம் ஒருதந்தையின் குழந்தைகள் பிராமண பிராமணிகளான நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரன் - சகோதரி ஆவீர்கள். இந்த விஷயம் எது வரை யாருடைய புத்தியிலும் நன்றாகபதியவில்லையோ அதுவரை விகாரங்களிலிருந்து விடுபட முடியாது. எதுவரை பிரம்மாவின்குழந்தையாக ஆகவில்லையோ அதுவரை தூய்மை அடைவது மிகவும் கடினம் ஆகும். உதவிகிடைக்காது. நல்லது, பிரம்மாவின் விஷயத்தை விடுங்கள். நாங்கள் பகவானின் குழந்தைகள் என நீங்கள் சொல்கிறீர்கள், சாகாரத்தில் சொல்கிறீர்கள், இந்த கணக்கின்படி பார்த்தால்சகோதரன் – சகோதரி ஆகி விட்டீர்கள். பிறகு விகாரத்தில் செல்ல முடியாது. நாங்கள்ஈஸ்வரனின் குழந்தைகள் என அனைவருமே சொல்வார்கள் மற்றும் தந்தை சொல்கிறார் - குழந்தைகளே! நான் வந்து விட்டேன், இப்போது யாரெல்லாம் என்னுடையவர்கள்ஆகிவிட்டனரோ அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரன் - சகோதரி ஆகி விட்டனர்.பிரம்மாவின் மூலம் சகோதரன் - சகோதரியின் படைப்பு ஏற்படுகிறது என்றால் பிறகுவிகாரத்தில் செல்ல முடியாது. இது உங்களின் இறுதிப்பிறவி என தந்தை சொல்கிறார். ஒருபிறவிக்கு இந்த விகாரத்தை தியாகம் செய்யுங்கள். சன்னியாசிகள் காட்டிற்குச் செல்வதற்காக (விகாரத்தை) விடுகின்றனர். நீங்கள் தூய்மையான உலகிற்குச் செல்வதற்காக விடுகிறீர்கள்.சன்னியாசிகளுக்கு ஏதும் சபலம் கிடையாது. இல்லறவாசிகள் அவர்களுக்கு நிறைய மதிப்புகொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் கோவிலில் பூஜிக்கத் தக்கவர்களாக ஏதும் ஆவதில்லை.கோவிலில் பூஜிக்கத்தக்கவர்கள் தேவதைகள் தான் ஆவார்கள் ஏனென்றால் அவர்களின்ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாய் இருக்கும். இங்கே நமக்கு தூய்மையான சரீரம்கிடைக்க வாய்ப்பில்லை. இது தமோபிரதானமான தூய்மையற்ற சரீரம் ஆகும். 5 தத்துவங்களும் தூய்மையற்றவை ஆகும். அங்கே ஆத்மாவும் தூய்மையாய் இருக்கும் 5 தத்துவங்களும் சதோபிரதானமாக தூய்மையாய் இருக்கும். இப்போது ஆத்மாவும் தமோபிரதானமாக இருக்கிறது, எனவே தத்துவங்களும் தமோபிரதானமாக இருக்கின்றன.ஆகையால் வெள்ளம், புயல் முதலானவை அதிகமாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.பிறருக்கு துக்கம் கொடுப்பது - இது தமோ குணமாகும். சத்யுகத்தில் தத்துவங்களும் கூடயாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. இந்த சமயம் மனிதரின் புத்தியும் கூட தமோபிரதானமாகஇருக்கிறது. சதோ, ரஜோ, தமோவிலும் கூட கண்டிப்பாக வர வேண்டும். இல்லாவிட்டால்பழைய உலகமாக எப்படி ஆக முடியும் - பிறகு புதியதாக ஆக்கக் கூடிய தந்தை வர வேண்டுமே.இப்போது தந்தை சொல்கிறார் - குழந்தைகளே தூய்மையடையுங்கள். இந்த கடைசி பிறவி இராவணனின் சங்கிலி பிணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுங்கள். அசுரவழியில் அரைக்கல்பம் நீங்கள் தூய்மை இல்லாமல் இருந்தீர்கள், இது மிகவும் கெட்ட பழக்கம்ஆகும். அனைத்திலும் பெரிய எதிரி காமம் ஆகும். சிறிய வயதில் கூட விகாரத்தில் சென்றுவிடுகின்றனர் ஏனென்றால் அப்படிப்பட்ட தொடர்பு கிடைக்கிறது. சமயமே அப்படிப்பட்டது,கண்டிப்பாக தூய்மை இல்லாதவர்களாக வேண்டும். சன்னியாச தர்மத்தின் பாகமும்நாடகத்தில் உள்ளது. சிருஷ்டியை எரிந்து (முற்றிலும் அழிந்து) போகாமல் கொஞ்சம் காப்பாற்றுகின்றனர். இப்போது நாடகத்தையும் குழந்தைகளாகிய நீங்கள்தான் அறிவீர்கள்.கிறிஸ்தவ தர்மத்திற்கு இவ்வளவு வருடங்கள் ஆகியுள்ளது, ஆனால் கிறிஸ்தவ தர்மம் பிறகுஎப்போது அழியும் என்பது தெரியாது. கலியுகம் இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் நடக்கவேண்டியுள்ளது என சொல்கின்றனர், ஆக கிறிஸ்தவர்கள் முதலான அனைத்து தர்மங்களும் 40 ஆயிரம் வருடங்கள் வரை மேலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்குமா? இப்போது 5 ஆயிரம்வருடங்களிலேயே இடம் நிறைந்து விட்டது எனும்போது 40 ஆயிரம் வருடங்களில் என்னஆகும் என தெரியாது.. சாஸ்திரங்களில் நிறைய கட்டுக் கதைகள் கட்டி விட்டனர், ஆகையால் அபூர்வமாக சிலர்தான் இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு காலடியிலும்ஸ்ரீமத்படி நடக்கின்றனர். ஸ்ரீமத்படி நடப்பது எவ்வளவு கடினம். முழு உலகமும் பூஜிக்கக் கூடியலட்சுமி நாராயணர் போல நீங்கள் இப்போது ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இதனை நீங்கள்தான்அறிவீர்கள் அதுவும் வரிசைக்கிரமமாக. என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் வீட்டைநினைவு செய்யுங்கள் என்று இப்போது தந்தை சொல்கிறார். வீடு என்றால் விரைவில் நினைவுவருகிறதல்லவா. மனிதர்கள் 8-10 வருடங்கள் வெளியூர் பிரயாணம் செய்துவிட்டு திரும்பிவரும்போது இப்போது நாம் நம்முடைய பிறப்பிடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் எனமகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்போது அந்த பிரயாணம் சிறிது சமயத்திற்காக, ஆகையால் வீட்டைமறப்பதில்லை. இங்கேயோ 5 ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன, ஆகையால் வீட்டைமுற்றிலும் மறந்து விட்டனர்.
இப்போது தந்தை வந்து சொல்லியிருக்கிறார் - குழந்தைகளே, இது பழைய உலகம் ஆகும்,இதற்கு தீ பற்றப் போகிறது. யாரும் தப்பிக்கப் போவதில்லை, அனைவரும் இறக்க வேண்டும்,ஆகையால் இந்த அழுகிப் போன உலகம் மற்றும் துர்நாற்றமெடுத்த சரீரத்தின் மீது அன்புவைக்காதீர்கள். சரீரத்தை மாற்றி மாற்றி 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. 84 முறைசரீரத்தை மாற்றி வந்தீர்கள். இப்போது உங்களுடைய 84 பிறவிகள் முடிந்து விட்டன, எனவேநான் வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். உங்களுடைய நடிப்பின் பாகம் முடிந்து விட்டதுஎன்றால் அனைவருடையதும் முடிந்து விட்டது. இந்த ஞானத்தை தாரணை செய்ய வேண்டும்.முழு ஞானமும் புத்தியில் உள்ளது. தந்தை மூலம் ஞானம் நிறைந்தவர் ஆவதன் மூலம் பிறகு முழு உலகின் எஜமான் ஆகி விடுகிறீர்கள் மற்றும் உலகமும் புதியதாக ஆகி விடுகிறது. பக்திமார்க்கத்தில் உள்ள கர்ம காண்டத்தின் (சடங்குகளுக்கான) பொருட்கள் அனைத்தும் அழியப்போகிறது. பிறகு ஓ பிரபுவே என சொல்பவர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். ஐயோ ராமா,ஓ பிரபுவே எனும் வார்த்தைகள் துக்கத்தில் தான் வெளிப்படுகின்றன. சத்யுகத்தில்வெளிப்படாது, ஏனென்றால் அங்கே துக்கத்தின் விஷயம் இருக்காது. ஆக இப்படி நினைவுசெய்யப் படக்கூடிய தந்தையின் வழிப்படி ஏன் நடக்கக் கூடாது. ஈஸ்வரிய வழிப்படி சதா சுகம்நிறந்தவர்களாக ஆகி விடுவீர்கள். இது புரிந்திருந்தும் ஸ்ரீமத்படி நடக்காவிட்டால் அவர்கள் மகாஅறிவிலிகள் எனப்படுவர். ஈஸ்வரிய வழி மற்றும் அசுர வழி இரண்டிற்கும் இரவுக்கும்பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. இப்போது நாம் எந்தப் பக்கம் போகலாம் எனதீர்மானியுங்கள். மாயையின் பக்கம் துக்கமே துக்கம் உள்ளது. ஈஸ்வரனின் பக்கம் 21 பிறவிகளின் சுகம் உள்ளது. இப்போது யார் வழியில் செல்வது?
ஸ்ரீமத்படி நடக்க விரும்பினால் நடந்திடுங்கள் என தந்தை சொல்கிறார். முதல் விஷயம்காமத்தின் மீது வெற்றி அடையுங்கள். அதற்கும் முதல் முக்கிய விஷயம் என்னை நினைவுசெய்யுங்கள். இந்த பழைய சரீரத்தை விடத்தான் வேண்டும். இப்போது திரும்பிச் செல்லவேண்டும். நாம் 84 பிறவிகளின் பழைய சரீரத்தை விடுகிறேன் என இப்போது நமக்கு எண்ணம்ஏற்படுகிறது. அங்கே சத்யுகத்தில் புரிந்து கொள்வார்கள் - இந்த வயோதிக சரீரத்தை விடுத்துபிறகு குழந்தைப் பருவத்தில் வரப்போகிறோம் என்று. இந்த பழைய உலகத்தின் மகா வினாசம்ஆகப் போகிறது. இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. இதனை தந்தை நமக்குமுன்னால் அமர்ந்து புரிய வைக்கிறார். இந்த எல்லா விஷயங்களும் நினைவில் இருந்தது என்றால் ஆஹா சௌபாக்கியமே, எவ்வளவு சகஜமானது. பிறகும் கூட இனிமையானவீட்டையும் இனிமையான இராஜ்யத்தையும் ஏன் மறந்து விடுகின்றனர் என தெரியவில்லை.ஏன் நினைவு செய்வதில்லை? கெட்ட தொடர்பில் வந்து அழுக்காக ஆகின்றனர். குழந்தைகளேஅழுக்கான சிந்தனைகள் நிறைய வரும், ஆனால் கர்மேந்திரியங்களின் மூலம் எந்த தீயகாரியமும் செய்து விடக் கூடாது. பாவ கர்மத்தை செய்து விட்டு பிறகு பாபா இந்த பாவ கர்மம்ஆகி விட்டது, மன்னியுங்கள் என்று கூறக் கூடாது. பாவ கர்மம் செய்து விட்டால் அதற்கு நூறுமடங்கு தண்டனை கிடைத்து விடும். ஒன்று தெரியப்படுத்தாவிட்டால் தண்டனை கிடைக்கும்.அஜாமினாக யார் ஆகின்றனர் என இந்த சமயம் தெரிந்து விடும். யார் ஈஸ்வரனின் மடியில்வந்து விட்டு பிறகு விகாரத்தில் சென்றார்கள் என்றால் இவர்கள் பெரிய அஜாமின் எனஉறுதியாகிறது, பாவாத்மாக்களாக இருக்கின்றனர், விகாரம் இன்றி இருக்க முடிவதில்லை.சினிமா அனைவரையும் அழுக்காக்கக் கூடியதாகும். நீங்கள் எல்லா விகாரங்களிலிருந்தும் விடுபட்டு தூரமாக ஓட வேண்டும். பிராமணர்கள் விகாரமற்றவர்கள் எனவே தொடர்பும்பிராமணர்களுடன் இருக்க வேண்டும். சூத்திரர்களின் தொடர்பில் துக்கம்மிக்கவர்களாக ஆகின்றனர். சரீர நிர்வாகத்திற்காக அனைத்தும் செய்யத்தான் வேண்டும். ஆனால்கர்மேந்திரியங்களின் மூலம் எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. ஆம், குழந்தைகளை சீர்திருத்துவதற்காக புரிய வைக்க வேண்டும், ஏதாவது ஒரு யுக்தியின் மூலம் லேசான தண்டனைகொடுக்க வேண்டும். படைப்பை படைத்திருக்கிறீர்கள் எனும்போது பொறுப்பும் இருக்கிறது.அவர்களையும் உண்மையான வருமானத்தை சேமிக்க வைக்க வேண்டும். சிறு சிறுகுழந்தைகளுக்கும் கூட கொஞ்சம் சொல்லிக் கொடுப்பது நல்லது. சிவபாபாவை நினைவுசெய்வதன் மூலம் உதவி கிடைக்கும். உண்மையான மனம் உள்ளவர்கள் மீது சாஹிப் திருப்திஅடைகிறார். உண்மையான உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கு மட்டும்தான் தந்தையின்உதவி கிடைக்கிறது. இப்போது முழு உலகத்தில் யாரும் யாருக்கும் உதவி செய்பவர் இல்லை.உதவி என்பது சுகத்தில் எடுத்துச் செல்வது என்பதாகும். ஒரு பரமாத்மாவைத்தான் நினைவுசெய்கின்றனர், அவர்தான் வந்து அனைவருக்கும் அமைதி கொடுக்கிறார். சத்யுகத்தில்அனைவரும் சுகம் மிக்கவர்களாக இருப்பார்கள். மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்திதாமத்தில் இருப்பார்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது, அனைவரும் உலகின் எஜமானர்களாகஇருந்தனர். அசாந்தி, அடிதடி எதுவும் இருக்கவில்லை. கண்டிப்பாக அந்த புதிய உலகத்தைபாபாதான் படைத்திருப்பார். பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும். எப்படி என்பதும் கூடயாரும் புரிந்து கொள்வதில்லை. அது இராமராஜ்யம் என சொல்லப்பட்டது. இப்போது இல்லை.இருந்தது என்பது சரிதானே. பூஜைக்குரியதாக இருந்த அதே பாரதம் பூஜாரி ஆகி விட்டது, பிறகுபூஜைக்குரியதாக மீண்டும் கண்டிப்பாக ஆகும். இப்போது நீங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள். சிவ பகவானின் மகா வாக்கியம் - ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா இறுதிப்பிறவியில் கேட்டுக் கொண்டிருக்கிறது, மீண்டும் ஸ்ரீகிருஷ்ணராக ஆக வேண்டியுள்ளது.அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். அந்த நேரம் மிகவும் நன்றாகஇருக்கும். அதிர்வலைகளும் கூட சுத்தமாக இருக்கும். ஆத்மா இரவில் களைத்து விடும்போதுநான் விடுபட்டு விடுகிறேன் என சொல்வது போல உங்களுடைய புத்தியும் கூடஇங்கிருந்தாலும் அங்கே ஈடுபட வேண்டும். அமிர்தவேளை எழுந்து நினைவு செய்வதன் மூலம்பகலும் கூட நினைவு வரும். இது வருமானமாகும். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்தஅளவு விகர்மாஜீத் (பாவ கர்மங்களை வென்றவர்) ஆவீர்கள், தாரணை ஆகும். யார்தூய்மையாய் இருக்கின்றனரோ, நினைவில் இருக்கின்றனரோ அவர்கள்தான் சேவை செய்யமுடியும். வழிப்படி நடந்தால் பாபா திருப்தி அடைவார். முதலில் சேவை செய்ய வேண்டும்,அனைவருக்கும் வழி காட்ட வேண்டும். யோகத்திற்கான வழிமுறை காட்டுவதற்கும் கூடஞானம் கொடுப்போம் அல்லவா. நினைவில் இருப்பதன் மூலம் பாவ கர்மங்கள் அழியும்.கூடவே சக்கரத்தையும் சுற்ற வேண்டும். ஞானம் யோகத்தில் நிறைந்தவர் ஆக வேண்டும்.பிறகு கருத்துகளும் (ஞான விஷயங்களும்) நினைவிற்கு வந்தபடி இருக்கும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்குதாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக்குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. இந்த அழுகிப்போன உலகம், துர்நாற்றம் வீசும் சரீரத்தின் மீதிருக்கும் பற்றினை நீக்கி ஒருதந்தையையும் வீட்டையும் நினைவு செய்ய வேண்டும். சூத்திரர்களின் தொடர்பிலிருந்து
தன்னை பாதுகாத்துக் கொள்ள
வேண்டும்.
2. விகர்மங்களை வென்றவர் ஆவதற்காக அமிர்த வேளை எழுந்து நினைவில் அமர வேண்டும்.இந்த
சரீரத்திலிருந்து விடுபட்டிருக்கக் கூடிய பயிற்சியை செய்ய வேண்டும்.
வரதானம் :
ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு பொக்கிஷத்தையும் நற்பலனுள்ளதாக ஆக்கி வெற்றியின் குஷியை அனுபவம் செய்யக் கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.
வெற்றி மூர்த்தி ஆவதற்கான விசேஷ சாதனம் - ஒவ்வொரு வினாடியையும், ஒவ்வொருசுவாசத்தையும், ஒவ்வொரு பொக்கிஷத்தையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். எண்ணம்,பேச்சு, செயல், சம்மந்தம் -தொடர்பில் அனைத்து விதமான வெற்றியின் அனுபவத்தை பெறவிரும்பினால் நல்ல பலனுள்ளதாக ஆக்கிக் கொண்டே செல்லுங்கள், வீணாக போகக் கூடாது.தனக்காக நற்பலனுள்ளதாக ஆக்கினாலும் சரி, மற்ற ஆத்மாக்களுக்காக ஆக்கினாலும் சரி,அப்போது தானாகவே வெற்றியின் குஷியை அனுபவம் செய்தபடி இருப்பீர்கள். ஏனென்றால்பயனுள்ளதாக ஆக்குவது என்றாலே தற்சமயத்தில் வெற்றியை பிராப்தி செய்வது மற்றும்எதிர்காலத்திற்காக சேமிப்பது ஆகும்.
சுலோகன் :
எண்ணத்திலும் கூட எந்த கவர்ச்சியாலும் ஈர்க்கப்படாமல் இருந்தால் அப்போது அதை சம்பூரண தன்மையின் அருகாமை என சொல்வோம்.
ஒம்சாந்தி