05.12.2016    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உண்மையான தந்தையுடன் எப்போதும் உண்மையாக இருங்கள். உண்மையைத் தெரிவிக்கவில்லை என்றால் பாவம் பெருகிக் கொண்டே போகும்.
கேள்வி :
ருத்ர யாகத்தில் ரட்சகரான உண்மையிலும் உண்மையான பிராமணர்களின் தாரணைகளையும் அடையாளங்களையும் கூறுங்கள்?
பதில்:
யாகத்தின் ரட்சகரான பிராமணர்கள் ஒரு போதும் தவறான காரியங்களைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஆத்ம உணர்வுடையவராகி முதல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்களுக்குள்ளே இராவணனின் எந்த ஒரு அம்சமும் அதாவது பூதம் இருக்காது. மிக மிக இனிமையாக இருப்பார்கள். பாபாவிடம் எப்போதும் உண்மையாக இருப்பார்கள். யாராவது அசுர மனிதர்கள் ஒரு வேளை தவறு செய்து விட்டாலும் அவர்கள் மீது கோபப்படமாட்டர்கள். ஒவ்வொரு செயலினாலும் தந்தையை வெளிப்படுத்துவார்கள்.
பாடல் :
யார் தந்தையுடன் இருக்கிறார்களோ.....
ஓம் சாந்தி.
யார் தந்தையுடன் இருக்கிறார்களோ, சகோதரன் மற்றும் சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்கிறார்கள். வேறு எந்த சென்டர்களிலும் இவ்வாறு நடக்காது. இங்கே தான் சட்டம் இருக்கிறது. பாப்தாதா வரும் வரை ஒருவருக்கொருவர் பாபாவுடன் புத்தி யோகத்தை இணைப்பதற்கு உதவி செய்வதற்காக யோகத்தில் அமர்கிறார்கள். தானும் நினைவில் அமர்கிறார்கள். மேலும் மற்றவர்களையும் சைகையின் மூலம் நினைவில் அமர வைக்கிறார்கள். நாங்களும் நினைவில் அமர்ந்திருக்கிறோம். நீங்களும் சிவபாபாவின் நினைவில் அமருங்கள். சிவபாபாவை நினைப்பதால் நம்முடைய விகர்மங்கள் எரிந்து போகும் என குழந்தைகள் அறிகிறார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்ள வேண்டும். யார் எதிரில் அமர்கிறார்களோ அவர்களும் அச்சமயம் நினைவில் இருக்க வேண்டும். மாணவர்களை பாபாவின் நினைவில் அமருங்கள் என்று கூறிவிட்டு டீச்சரின் புத்தி இங்கும் அங்கும் உறவினர்கள் பக்கம் செல்லக் கூடாது. இது அழகல்ல. டீச்சரின் மீது குற்றம் ஏற்பட்டு விடும். ஆகவே, முதலில் தன்னை இது போன்ற நிலையில் நிலைக்க வைக்க வேண்டும். நாம் விகர்மங்களை அழிப்பதற்காக பாபாவை நினைக்கின்றோம். இதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. வெளியில் இருப்பவர்களுக்கு சிக்கலான வேலை, நண்பர்கள் உறவினர்கள், குரு, சன்னியாசி போன்றோரின் எண்ணம் வருகிறது என புத்தி புரிந்துக் கொள்கிறது. புத்தி போய்க் கொண்டே இருக்கிறது. இங்கே உங்களுக்கு எந்த சிக்கலான வேலையும் இல்லை. நீங்கள் அதிகமாக நினைக்கலாம். எவ்வளவு முடியுமோ சிவபாபாவை நினைக்க வேண்டும். ஒரு வேளை நண்பர்கள் உறவினர்கள் போன்றோரின் நினைவு வந்தால், வேறு எங்காவது புத்தி சென்றால் தண்டனை கிடைக்கும். யோகத்தில் இல்லாததால் வாயு மண்டலத்தைக் கெடுத்து விடுகின்றனர். அனைவரும் பாபாவின் நினைவில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சில நேரம் எங்களின் புத்தியின் தொடர்பு இணையவில்லை, இன்னாருடைய நினைவு வந்து விட்டது என்று சிலர் உண்மையைக் கூறுவதில்லை. உண்மையான குழந்தைகள் உடனே வந்து பாபாவிடம் எங்கள் மூலம் இந்த பாவம் ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றனர். இன்னாரிடம் கோபப்பட்டு விட்டேன். அவரை அடித்து விட்டேன். பல குழந்தைகள் உண்மையைக் கூறுவதில்லை. பிறகு இன்னும் அந்த பழக்கம் ஊறிப் போய் விடுகிறது. விகர்மங்கள் நிறைய நடந்துக் கொண்டே இருக்கிறது. முன்பு மம்மா இரவு வகுப்பு(விசாரணை) நடத்தினார். யாரும் விகர்மம் செய்யவில்லையே என கேட்பார். உண்மையைக் கூறவில்லை என்றால், தண்டனை அதிகமாக கிடைக்கும் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். நன்மைக்குப் பதிலாக நஷ்டம் ஏற்பட்டு விடும். உண்மையானவர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள். உண்மையானவர்கள் பாபாவின் சேவையிலும் உண்மையாக இருக்கிறார்கள். யாருக்கு வேண்டுமானாலும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பது எளிதாகும். ஆனால் படக் கண்காட்சிகளில் இவ்வளவு பேர் வருகிறார்கள். மிகச் சிலரே புரிய வைக்கிறார்கள். தவறுதலான கணிப்பு என்ன உள்ளதோ அது நீங்குகிறது. அவர்களில் யார் பிராமண குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்களின் புத்தயில் பதிகிறது. மற்றபடி அசுர சம்பிரதாயத்தினார் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். சங்கமயுகத்தில் தான் ஒரு புறம் அசுர சம்பிரதாயம். இன்னொரு புறம் தெய்வீக சம்பிரதாயம். இப்போது நீங்கள் தெய்வீக குணங்களைக் கடைபிடித்து தெய்வீக சம்பிரதாயத்தினராக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் பிராமண சம்பிரதாயத்தினர். அவர்கள் சூத்திர சம்பிரதாயத்தினர். இந்த ரகசியங்கள் அனைத்தையும் நீங்கள் அறிகிறீர்கள். நாம் 84ன் சக்கரத்தைக் கடந்து முடித்து விட்டோம். இப்போது மீண்டும் சக்கரம் சுழல்கிறது. இப்போது சக்கரம் முடிவடையப் போகிறது. பிறகு இங்கிருந்து மேலே போக வேண்டும். மற்றபடி இந்த சித்திரம் போன்றவை இருக்கின்றது. அதன் மூலமாக எதுவும் புரிந்துக் கொள்வதில்லை. ஆகவே, இவர்கள் அசுர சம்பிரதாயத்தினர் கல்புத்தி உடையவர் என பாபா கூறியுள்ளார். இந்த பெயர்கள் அனைத்தும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
நான் ஏழைப் பங்காளன் என பாபா புரிய வைக்கிறார். ஏழைகள் தான் தானத்தைப் பெறுகிறார்கள். இங்கே கூட ஏழைகள் தான் வருவார்கள். அவர்களை உயர்த்துவதற்கு முயற்சி செய்யுங்கள். குருசேத்திரத்தில் குழந்தை லஷ்மணனுக்கு (ஒரு மூத்த சகோதரர்) சேவை செய்வதற்கு நிறைய விருப்பம் இருக்கிறது. எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ ஒவ்வொரு ஊருக்கும் சென்று புரஜெக்டர் வைத்து சேவை செய்கிறார். முதலே நாங்கள் உங்களுக்கு வரலாறு புவியலை புரஜெக்டர் மூலமாகப் புரிய வைக்கிறோம் என அறிவித்து விடுகிறார்கள். ஒவ்வொரு படத்தையும் புரிய வைத்து உறுதி படுத்துங்கள். பரம்பிதா பரமாத்மா எல்லையற்ற தந்தை அவருடைய பிறப்பு பாரதத்தில் தான் ஏற்படுகிறது. பாபா புரிய வைக்கிறார். சிவஜெயந்தி கூட பாரதத்தில் தான் கொண்டாடு கிறார்கள். பாபா பாரதத்தில் தான் வந்து பிரம்மா மூலமாக விஷ்ணு புரியை ஸ்தாபனை செய்கிறார். திரிமூர்த்தியின் சித்திரம் கூட எவ்வளவு நன்றாக இருக்கிறது. திரிமூர்த்தியைப் பற்றிய ஞானம் யாருக்கும் சிறிதும் இல்லை. திரிமூர்த்தி என்ற பெயரில் ஒரு கட்டிடம் இருக்கிறது என்றால் திரிமூர்த்தி பெயர் ஏன் வைக்கப்ட்டிருக்கிறது? திரிமூர்த்தி யார் என கேட்க வேண்டும். திரிமூர்த்தி யாருடைய நினைவுச் சின்னம் என்று செய்திதாட்களில் கூட போட முடியும். தெருக்களுக்கு பெயர் வைப்பதற்கு என்று கூட குழு இருக்கிறது. பாரத வாசிகள் யாருடைய பூஜை செய்கிறார்களோ அவருடைய தொழிலையே அறியவில்லை. இல்லை என்றால், தங்களை தேவி தேவதா தர்மத்தினர் என கூறி இருப்பர். ஆனால் இராவண இராஜ்ஜியம் ஆரம்பம் ஆகியதிருந்து இந்து என அழைத்து விட்டனர். மேலும் பாரத கண்டத்திற்குப் பதிலாக இந்துஸ்தான் கண்டம் என கூறிவிட்டனர். இராவண இராஜ்யத்திலிருந்து தான் இந்துஸ்தான் என்ற பெயர் ஆரம்பித்தது. இப்போது யாருக்காவது நேரம் இருந்தால் தான் யாராவது புரிய வைக்க முடியும். யார் தேவதையாக மாற வேண்டுமோ அவர்களுக்குத் தான் நேரம் கிடைக்கிறது. அவர்களே வந்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் எலும்புகள் இப்போது மென்மையாக்கப்படுகிறது. ஞானம் மற்றும் யோக அக்னியினால் கல்புத்தி உடையவர்களை மென்மையாக்கப்படுகிறது. படக் கண்காட்சிகளில் வியக்கத் தக்க வகையில் புரிய வைப்பதைப் பார்த்து நெகிழ்ந்து போகிறார்கள் அல்லவா? சிலரோ முற்றிலும் கல்புத்தியாகவே இருக்கிறார்கள். வெடிகுண்டு இல்லாமல் திருந்துவதில்லை. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். கடைசியில் யாராவது இருக்க வேண்டும் அல்லவா? யார் பயமற்றவராக இருக்கிறார்களோ யாருடைய புத்தியின் தொடர்பு ஒரு தந்தையுடன் இருக்கிறதோ அவர்களே இருப்பார்கள். பலருக்கு பயத்தின் நோய் இருக்கிறது. பாபா சிவபாலகனுக்கு இரவு பாபாவிடம் நீ மிகவும் பயமற்று இருக்கிறாய் என கூறிக் கொண்டிருந்தார். குருக்களிடம் பயப்படுவதில்லை. பணம் இல்லாமல் யாரையும் வர அனுமதிப்பதில்லை. தற்காலத்தில் விலங்குகளைப் போன்று கூட மனிதர்களுக்கு புத்தி இல்லை. எனவே தான் குரங்கு சம்பிரதாயம் என்று கூறப்படுகிறது. நாரதர் கூட மனிதனாக இருந்தார் அல்லவா? ஆனால் அவருக்கு உன் முகத்தை பார்த்துக் கொள் என கூறப்படுகிறது. உங்களுக்குள் அசுர குணம் இருக்கிறது. தேக உணர்வு நம்பர் ஒன் ஆகும். இது குரங்கு படை என பகவானே கூறியிருக்கிறார். சீதையை கடத்திக் கொண்டு சென்று விட்டனர். பிறகு குரங்கு படை எடுத்தது என சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இப்போது யாரும் இராவணன் கிடையாது. பத்து தலைகளை உடைய இராவணன் சீதையை எப்படி விரட்டுவான். மிகவும் அதிசயமாக இருக்கிறது. இப்படி கல்புத்தி உடைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் உண்மை உண்மை என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். குரங்கு படை எங்கிருந்து வரும். தந்தை வந்து பிறகு தேவதைகயாக மாற்றுகிறார். நீங்கள் பாரதம் எப்படி இருந்தது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கிறீர்கள். பாபா வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக மாற்றுகிறார். எனவே பாபா தான் கம்சன், ஜராசந்த், சிசுபாலன் போன்றோர் இருக்கின்றனர் என கூறுகின்றார். அது போன்ற செயல்கள் நடக்கிறது அல்லவா? இது சங்கமத்தின் விஷயம் ஆகும். பாபா புரிய வைப்பதிலும், மனிதர்கள் புரிய வைப்பதிலும் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. இராவண இராஜ்யம் ஆரம்பித்ததிலிருந்து தான் தங்களை இந்து என கூறிக் கொள்ள ஆரம்பித்தனர். ஜகத்நாத் கோவில் கூட இருக்கிறது. தேவதைகள் வாம மார்க்கத்தில் போக ஆரம்பித்ததிலிருந்து இந்துஸ்தான் என்ற பெயர் வெளிப்பட்டது. இந்து, இந்து என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இந்து தர்மத்தை யார் நிறுவினார்கள் என கேட்டால் கூற முடியாது. லஷ்மி நாராயணரை இந்து என கூற மாட்டார்கள். இவர்களோ தேவி தேவதைகளாக இருந்தனர் அல்லவா.
இனிமையிலும் இனிமையான காணாமல் போன கண்டெடுக்கப்பட்ட செல்ல குழந்தைகளே நீங்கள் தான் தந்தையுடன் இருக்கிறீர்கள். உங்களுக்கு நேரடியாக மழை பொழிகிறது. எவ்வளவு நல்லவர்களாக மாற வேண்டும். இது சிவபாபாவின் ருத்ர ஞான யக்ஞம் ஆகும். பிராமணர்களாகிய நீங்கள் இந்த யக்ஞத்தின் பாதுகாவலர்கள் எப்போதும் பிராமணர்கள் தான் யக்ஞத்தைப் பாதுகாக்கிறார்கள். பிராமணர்கள் எவ்வளவு நேரம் யக்ஞத்தை படைக்கிறார்களோ அது வரை தூய்மையற்றவர் ஆவதில்லை. இது மிகப் பெரிய யாகம் ஆகும். பிராமணர்கள் ஒரு போதும் பதீதம் ஆவதில்லை. நாங்கள் முகத்தில் கரி பூசிக் கொண்டோம் என பாபாவிற்கு கடிதம் எழுதுகிறார்கள். அட ! இது சிவபாபாவின் யக்ஞம் ஆகும். இதில் அனைத்து பிராமணர்களும் யக்ஞத்தின் பாதுகாவலர்கள் தவறான வேலைகள் செய்ய முடியாது. அவர்கள் முழுமையாக ஆத்ம உணர்வுடையவராக இருக்க வேண்டும். எந்த ஒரு விகாரமும் இருக்கக் கூடாது. தன்னை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இவர்கள் ஆண் குரங்கு பெண் குரங்கு என புரிந்துக் கொள்ளப்படும். அவர்கள் மிகவும் பாவத்தின் பங்காளிகள் ஆகிவிடுவார்கள். பிராமணன் ஆன பின்னர் ஒரு வேளை பாவ கர்மம் செய்தால் அதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும். இது முடிந்து விட்ட காலத்தின் கர்மத்தின் பலன் என கூறப்படுகிறது. இப்போதோ பாபா கர்மாதீத் ஆக்குகிறார். எந்த விகர்மமும் செய்யாதீர்கள். பிராமணர்களுக்குள் எந்த ஒரு பூதமும் இருக்கக் கூடாது. இல்லை என்றால், இராவணனின் அம்சமாகி விடுகிறது. பிறகு இங்கேயும் இருக்க முடியாது, அங்கேயும், இருக்க முடியாது. இது சிவபாபாவின் யக்ஞம் அல்லவா. சிறிது பாவ கர்மம் செய்தாலும் தர்ம ராஜின் நிறைய தண்டனைகள் அடைய வேண்டியிருக்கும். ஒரு வேளை யக்ஞத்தில் யாராவது தூய்மையற்ற செயல்களைச் செய்தார்கள் என்றால், மிகவும் தண்டனை அடைய வேண்டியிருக்கும். மிகவும் இனிமையாக மாற வேண்டும். அசுர மனிதர்கள் ஏதாவது தவறுகளை செய்துக் கொண்டிருக்கலாம். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் ஒரு போதும் கோபம் அடையக் கூடாது. உண்மையான பிராமணர்கள மிகவும் உண்மையாக இருக்க வேண்டும். யாராவது வந்தால் அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். நான் காத்தாடி பறக்க விட்டுக் கொண்டே யாராவது எதிரில் வந்தாலும் அவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்று பாபா கூறுவார். பாபாவை நினைவு செய்தால் விகர்மங்கள் அழியும். இதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். தங்களுக்குள் தெய்வீக குணங்கள் இருக்க வேண்டும். எந்த ஒரு சைத்தான் வேலையும் செய்யக் கூடாது. இல்லை என்ôறல் நிறைய தண்டனை அடைய வேண்டியிருக்கும். மரணம் எதிரிலேயே காத்திருக்கிறது. இது மிகப் பெரிய மகாபாரத போர் ஆகும். பாபா புதிய உலகத்திற்காக இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். பழையவை அழியத்தான் வேண்டும். இதை நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கலாம். ஆனால் முதலில் தங்களுடைய அவகுணங்களை நீக்குங்கள். அப்போது தான் அனைத்து குணங்களும் நிரம்பியவராகி 16 கலைகளிலும் சம்பூரணமாக மாறலாம். யக்ஞத்தின் பிராமணர்கள் யக்ஞத்தை மிகவும் நன்றாகப் பாதுகாக்க வேண்டும். மிக இனிமையாக மாற வேண்டும். யார் வேண்டுமானாலும் பார்க்கட்டும். இவர்களுக்குள் எந்த ஒருவித தேக உணர்வும் இல்லை என கூறட்டும். விருந்தினர்களுக்கு எப்போதும் உபசரிப்பு செய்யப்படுகிறது. நல்ல குழந்தைகள் பாபாவை வெளிப்படுத்துவதற்காக மிகவும் உபசரிப்பார்கள். பாபாவிற்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். பாபா இந்த பாரதத்தில், தான் இந்த எல்லையற்ற வேள்வியைப் (யக்ஞத்தை) படைத்திருக்கிறார். நீங்கள் பிராமணர்கள் தான் உலகத்திற்கே அதிபதியாக மாறப் போகிறீர்கள். கடினமாக முயற்சிக்க வேண்டும். தூய்மையாக மாறுவதில் எவ்வளவு தகராறுகள் ஏற்படுகின்றன. மனைவி ஞானத்தில் இருக்கிறார், கணவர் இல்லை என்ôறல் நிச்சயமாக சண்டை ஏற்படும். குழந்தைகளாகிய நீங்கள் மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இதில் அனைத்தும் குப்தமாக (மறைவாக) இருக்கிறது. ஆத்மா சுகத்தை உணர்கிறது அல்லவா? நாம் எதிர் காலத்தில் உலகத்திற்கே அதிபதி ஆகப் போகின்றோம். இங்கே இருப்பவர்களுக்கு மிகவும் எளிதாகும். வேறு எந்த கடினமான வேலையும் இல்லை. மிகவும் இனிமையாக மாற வேண்டும். பூத நாதனாக மாறினால் உலகத்திற்கு அதிபதியாக எப்படி மாற முடியும். தனது வருமானத்திற்கு  கரையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பூதங்களை ஒரேயடியாக விரட்ட வேண்டும். நல்ல குழந்தைகளின் வேலை எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நாம் ஒரு போதும் பாபாவின் பெயரை கெட்ட பெயர் ஆக்கக் கூடாது. பூதம் நுழைந்து விட்டால் அவர்களுக்கு நமக்குள் பூதம் நுழைந்து விட்டது என தெரிவதில்லை. 5 விகாரங்களுக்கு பூதம் என்று கூறப்படுகிறது. அவர்கள் (தேவதைகள்) விகாரமற்றவர்கள் இதுவோ விகாரம் நிறைந்த உலகம். இருப்பினும் ஏற்றுக் கொள்வதில்லை. பல வழிகள் உள்ளன அல்லவா? நாடகத்தின் படி பாபா தான் வந்து ஒரு வழியை உருவாக்குகிறார். இதையும் யாரும் அறியவில்லை. ஒரு வழி உருவாக வேண்டும் என கூறிக் கொண்டே இருக்கின்றார்கள். பல தர்மங்கள் பல வழிகள் என்று இருக்கும் போது எப்படி ஒரு வழி உருவாக்க முடியும். ஒரே தர்மம், ஒரே வழி சொர்க்கத்தில் தான் இருந்தது. மனிதர்கள் யாரும் சொர்கத்தை உருவாக்க முடியாது. எவ்வளவு அதிசயமான விஷயங்கள்! ஏதாவது விசார சாகர மந்தனம் செய்துக் கொண்டே இருந்தால் பூதம் நுழையாது. எந்த ஒரு பூதமும் நுழையவில்லை என்றால், முகமும் மாறி விடுகிறது. யாரையாவது மனிதனிலிருந்து தேவதையாக மாற்றிக் காட்டுங்கள். இது உங்களுடைய அமைப்பாகும். தோட்டத்தைப் பராமரிப்பவர் நல்ல நல்ல மலர்களின் நாற்று நட்டு தோட்டத்தை பெரிதாக்கினால் தோட்டக்காரரும் வந்து பார்ப்பார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1. எந்த ஒரு பூதத்திற்கும் வசமாகி தனது வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. பூதங்களை ஒரேயடியாக வெளியேற்றி நல்லபிள்ளையாக வேண்டும்.
2. பாபா விகர்மங்களை வென்றவர்களாக நம்மை மாற்றுவதற்காக வந்திருக்கிறார். ஆகவே எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது. மிக மிக இனிமையாக மாற வேண்டும். அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை அளிக்க வேண்டும். பயமற்றவராக இருக்க வேண்டும்.
வரதானம் :
விஸ்தாரத்தை சாரத்தில் அடக்கி தன்னுடைய உயர்ந்த நிலையை உருவாக்கிக் கொள்ள பாபாவிற்கு சமமாக லைட், மைட் அவுஸ் ஆகுக.
பாபாவிற்குச் சமமாக லைட், மைட் அவுஸ் ஆவதற்காக எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் அல்லது கேட்டாலும் அதனுடைய சாரத்தைப் புரிந்துக் கொண்டு, ஒரு நொடியில் உள்ளடக்கி அல்லது பரிவர்த்தனை (மாற்றம்) செய்வதற்கு பயிற்சி செய்யுங்கள். ஏன், என்ன என்று விஸ்தாரத்தில் செல்லாதீர்கள். ஏனென்றால், எந்த ஒரு விஷயத்தின் விஸ்தாரத்தில் செல்வதால் நேரம் மற்றும் சக்திகள் வீணாகிப் போகின்றன. எனவே, விஸ்தாரத்தை உள்ளடக்கி சாரத்தில் நிலைத்திருக்கப் பயிற்சி செய்யுங்கள். இதனால் மற்ற ஆத்மாக்களுக்கும் ஒரு நொடியில் முழு ஞானத்தின் சாரத்தையும் அனுபவம் செய்விக்கலாம்.
சுலோகன் :
தனது உள்ளுணர்வை சக்திசாயாக ஆக்கிக் கொண்டால் சேவையில் வளர்ச்சி தானாகவே நடக்கும்..
ஓம் சாந்தி
I like to invite you on our YouTube Channel
 
